நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், ஆண்டு திருவிழாவிற்காக புதுப்புலிவுடன் தயாராகி வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 500 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வங்கக்கடலோரம் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிடத்தில் உப்பு கலந்த கடல் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன. பேராலயத்தின் பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில் சுண்ணாம்பு, சுட்ட செங்கல், கடுக்காய் தண்ணீர் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தரைத்தளத்தில் ராஜஸ்தான் பலிங்கு கற்கள் பதிக்கும் பணியும், பக்தர்களின் வசதிக்காக புதிய கலையரங்கம் மற்றும் மாதா தீர்த்த குளத்தை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 29-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆண்டு திருவிழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று செப்டம்பர் 8-ந்தேதி நிறைவடைகிறது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பேராலய வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணிகள், சாரம் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/velankanni-matha-church-festival-renovation-works-being-carried-out-using-traditional-methods




