ஈரோடு, ஈரோடு மாவட்டம் நாராயண வலசு அம்பேத்கர் நகர் பகுதியில் 256 குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. மேலும், குடியிருப்பு வளாகத்துக்குச் சொந்தமான நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றி, புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dilapidated-apartment-complexes-public-protest-at-the-erode-collectors-office




