பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், " நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் காலை 10.30 மணிக்கு நான் காவல் நிலையம் சென்றேன். விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்." என தெரிவிக்கப்பட்டது. பழனி அரசுத் தரப்பில், " குறிப்பிட்ட இடம் பழனி மடத்திற்கு சொந்தமானது. அதனை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்பது தொடர்பான குறிப்புகள் இருந்தும் எப்படி பதிவு செய்தார்?” என கேள்வி எழுப்பப்பட்டது. மனுதாரர் தரப்பில், "பொறுப்பு பதிவாளராக சென்றதால் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது" என தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/governance/palani-land-fraud-case-court-dismisses-bail-plea-of-sub-registrar-justin-manikandan




