அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட சாதிய அவமதிப்புக்கு எதிராக குரல் கொடுத்த ராகுல் காந்தி மீது பாஜக அரசு வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். "காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள், காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தீண்டாமை மற்றும் அவமதிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காக அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பதே குற்றம் என்ற நிலையை பாஜக அரசு உருவாக்க முயல்வது, அதன் எதேச்சதிகாரப் போக்கையும், பழிவாங்கும் அரசியலையும் வெளிப்படுத்துகிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையைத் தெளிவாக ஒழித்திருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி | காங்கிரஸ் சாதியின் பெயரால் ஒரு மனிதர் அவமதிக்கப்படுவதையோ, பாகுபாடு காட்டப்படுவதையோ இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய சமத்துவம், சமூகநீதி, மனித கண்ணியம் ஆகிய கொள்கைகளே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அத்தகைய சமூகநீதிக் கொள்கைகளுக்காகப் போராடிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தீண்டாமையை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒழித்ததும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC/ST (Prevention of Atrocities) Act போன்ற சட்டப் பாதுகாப்புகளை உருவாக்கியதும் சமூகநீதிக்கான காங்கிரஸ் கட்சியின் உறுதியான பங்களிப்புகளாகும். ஆனால், இன்று தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஒருவர் குரல் எழுப்பும்போது, அந்தக் குரலை ஒடுக்க FIR-ஐ ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த வகையான ஜனநாயகம்? பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் கொடுப்பவரையே குற்றவாளியாக்குவது என்பது நீதியின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜக அரசு தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் முயல்வதை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ராகுல் காந்தி திரு. ராகுல்காந்தி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதிலளிக்க வேண்டிய பாஜக, FIR மற்றும் அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி அவரை மிரட்ட முயல்வது கண்டிக்கத்தக்கது. தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம். சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் எதிராக எடுக்கப்படும் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி அஞ்சாது" என்று பதிவிட்டிருக்கிறார். FIR பதிவு செய்ய 8 மணி நேர போராட்டம்: ‘நீதிக்கான பிரேக்’ எங்கிருந்து போடப்பட்டது? - ராகுல் காந்தி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/selvaperunthagai-on-fir-against-rahul-gandhi




