சென்னை, வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், ஐ.ஏ.எஸ்., (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், ஐ.ஏ.எஸ்., (மத்திய) இன்று (06.08.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகம், வார்டு-57க்குட்பட்ட பிரகாசம் சாலையில் உள்ள ஶ்ரீராமுலு பூங்காவில் மேம்படுத்தும் பணி, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை கட்டுமானப் பணி ஆகியவற்றை வடக்கு வட்டார துணை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசணைகளை வழங்கினார். கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட எஸ்.ஏ.எஃப் கேம்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்கா, அப்பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, கோயம்பேடு வட்டச் சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணி, வார்டு-135க்குட்பட்ட அசோக் பில்லர் பகுதியில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணி, பாஷ்யம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணி, அப்பகுதியில் உள்ள திறந்த வெளி இடம், வார்டு-136க்குட்பட்ட ஏ.பி. பட்ரோ சாலையில் உள்ள அம்மா உணவகம், அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை உள்ளிட்டவற்றைப் மத்திய வட்டார துணை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசணைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioners-personally-inspect-development-project-works-in-chennai




