சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர் தனத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசாருடன் அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பெற்றோர் கட்டாயப்படுத்தி கடந்த ஜூலை 5-ந்தேதி கோவிலில் வைத்து முருகன் என்பவ ருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் தனம் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வந்தவாசி தாலுகாவை சேர்ந்த ஞானமுருகனின் மகன் பெருமாள் (வயது 22) திருமணம் செய்து கொண்டார். குழந்தை திருமணம் குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஊரக அலுவலர் சித்ரா என்பவருக்கு தகவல் வந்தது. உடனே அவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் பெருமாள், அவரின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த பெற்றோர் மீது புகார் செய்தார். தொடர்ந்து சிறுமியை மீட்டு வாலாஜா ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைத்தார். இந்த வழக்கை திருமணம் நடந்த போலீஸ் எல்லையான செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-16-year-old-girl-case-registered-against-five-individuals-including-a-young-man



