பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கவுரிபுரா கிராமத்தில், 5 வயது குழந்தைக்கு அதன் பெற்றோர் ஸ்நாக்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் பரிசுப் பொருளாக ஒரு சிறிய பிளாஸ்டிக் பந்து இருந்துள்ளது. இதனை குழந்தையின் பெற்றோர் கவனிக்கவில்லை. இந்நிலையில் குழந்தை அந்த பிளாஸ்டிக் பந்தை மிட்டாய் என்று நினைத்து விழுங்கியதாக தெரிகிறது. அப்போது அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 5 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-ball-found-inside-a-snack-packet-5-year-old-child-dies-of-suffocation-after-accidentally-swallowing-it




