லாஸ் ஏஞ்சல்ஸ், நடிகர் மேத்யூ ரைஸ் 78-வது எம்மி விருது விழாவில் இரண்டு முக்கிய பிரிவுகளில் விருது வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு 78வது எம்மி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. ஒரே இரவில் இரு முன்னணி நடிகர் விருதுகள் இந்த 78-வது எம்மி விருது விழாவில் நடிகர் மேத்யூ ரைஸ் இரண்டு முக்கிய பிரிவுகளில் விருது வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஒரே இரவில் இரண்டு முன்னணி நடிகர் பிரிவுகளில் எம்மி விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இரண்டு பிரிவில் விருதுகள் ‘தி பீஸ்ட் இன் மீ’ (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக, லிமிடெட் அல்லது ஆந்தாலஜி தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவில் மேத்யூ ரைஸ் எம்மி விருதை வென்றார். அதே விழாவில் ‘விடோஸ் பே’ (Widow’s Bay) தொடருக்காக நகைச்சுவைத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் பிரிவிலும் அவர் விருது வென்றார். ஒரே விருது விழாவில் இரண்டு முன்னணி நடிகர் பிரிவுகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எம்மி விருது வென்றவர் மேத்யூ ரைஸ் ஏற்கனவே 2018-ம் ஆண்டு ‘தி அமெரிக்கன்ஸ்’ (The Americans) தொடருக்காக நாடகத் தொடரின் சிறந்த முன்னணி நடிகர் விருதை வென்றிருந்தார். இதன் மூலம் நாடகம், நகைச்சுவை மற்றும் லிமிடெட் தொடர் என மூன்று முக்கிய பிரிவுகளிலும் முன்னணி நடிகருக்கான எம்மி விருதை வென்ற முதல் ஆண் நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/two-emmy-awards-in-a-single-night-actor-matthew-rhys-makes-history




