சென்னை, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கவில்லை. முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டை ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக்கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "போலீசார் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்ட நோக்கம் இல்லை. அதே போல் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி, சேவல் சண்டையை முறைப்படுத்தவே டி.ஜி.பி. சுற்றறிக்கை பிறப்பித்தார். சேவல் சண்டைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, டி.ஜி.பி.யின் இந்த சுற்றறிக்கை குறித்து போலீசாருக்கு தெளிவுபடுத்த வேண்டும். சேவல் சண்டைக்கு எந்த தடையும் இல்லாததால், மனுதாரர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்" என்று உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-ban-on-rooster-fighting-in-tamil-nadu-dgp-clarifies-in-high-court




