கோவை, கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் விஜய், சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார். கோவை, மதுரையில் மெட்ரோ அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். எனவே இது தொடர்பாக பிரதமரிடம் கடிதங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் நேரடியாக விசாரணை மேற்கொள்ள கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே சபாநாயகர் அதற்கான முடிவுகளை எடுப்பார். நீட் தேர்வு போராட்டம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிற உணர்வுதான். நீட் வேண்டாம் என்பதுதான் முதல்-அமைச்சரின் கொள்கை முடிவு. அந்த முடிவில் அவர் தெளிவாக இருக்கிறார். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக இருப்பதையும் அவர் பிரதமரிடம் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை யில் ஒரு செங்கலை கூட கர்நாடகம் எடுத்து வைக்க முடியாது. அதை தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனுமதிக்கவும் மாட்டார். தமிழக பட்ஜெட் என்பது சீக்ரெட். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-lay-even-a-brick-in-mekedatu-minister-sengottaiyan




