சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் வட்ட செயலாளராக இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். உறவினர்கள் போராட்டம் இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண் ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவான்மியூர் பகுதி யில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப்பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடு பட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காத்திருப்போர் பட்டியல் கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதி ராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடை பெற்று வருகிறது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, கொலை சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகினி மற்றும் அடையார் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-murdered-deputy-commissioner-and-inspector-transferred-to-the-vacancy-reserve-list




