செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரைஇறுதியில் மோதுகிறார்கள். ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக் கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். மொத்தம் 28 புள்ளிகள் கொண்ட அரைஇறுதியில் 15 புள்ளிகள் எடுப்பவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார். இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் இடையே அரைஇறுதியின் 2-வது சுற்று நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 55-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்க வீரர்களான பேபியானோ கருணா-வெஸ்லி சோ இடையிலான அரைஇறு தியின் 2-வது ஆட்டம் 50-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/grand-chess-tourpraggnanandhaa-wins-the-second-game




