15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு விளம்பர வாய்ப்புகள் அதிக அளவில் வருகின்றன. பாலிவுட் பிரபலங்களுக்குக்கூட கிடைக்காத வரவேற்பு வைபவிற்கு கிடைத்து வருகிறது. இதனால், அடுத்தடுத்து விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஒரு நாள் விளம்பர படப்பிடிப்புக்கு லட்சங்களில் வாங்கிக்கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷி, இப்போது ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வரை வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளம்பரம் மட்டுமல்லாது எதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சூரியவன்ஷியின் வயது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஒரு மைனர் என்பதால், அவரால் தனிப்பட்ட முறையில் விளம்பர ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. எனவே, ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அவருக்கு ஒரு பாதுகாவலர் தேவைப்படுகிறார். சூரியவன்ஷியின் வணிக விவகாரங்களை நிர்வகிக்க தற்போது முறையான ஏஜென்சி எதுவும் இல்லை. அவரது குடும்பத்தினர் அவரது விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துக்கொள்கின்றனர். இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. ஐ.பி.எல் தொடரில் சிறப்பான அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாகவே அவர் பல்வேறு வணிக ஒப்பந்தங்களைப் பெற்றுவிட்டார். ஐ.பி.எல் போட்டிக்குப் பிறகு அவரது வணிக மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிக வருமானம் தரும் விளம்பர ஒப்பந்தங்கள் அவரது கிரிக்கெட் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியவன்ஷியின் அசுர வளர்ச்சிக்கு கிரிக்கெட் களத்தில், குறிப்பாக 2026 ஐ.பி.எல் தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. இத்தொடரில் அவர் அதிகம் பேசப்பட்ட இளம் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். வணிக ரீதியாகவும், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையான ஓர் இடத்தைப் பெறும் அளவிற்கு அவர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://sports.vikatan.com/2-crore-for-a-single-days-ad-shoot-rising-influence-of-15-year-old-cricketer-suryavanshi




