கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே ஆனந்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய யூதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ளது ஆனந்தூர் கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த தான்டோன்றீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள புதர்களை பொதுமக்கள் அண்மையில் அகற்றினர். கல்வெட்டு அங்கு பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:- யூதர்கள் குறித்த கல்வெட்டு ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ள யூதர்கள் குறித்த கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கொச்சியில் யூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி இருந்தாலும், இதுவரை யூதர்கள் குறித்து தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டும் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது தற்போது 2-வதாக யூதர்களை பற்றிய கல்வெட்டு ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குலோத்துங்கன் காலத்திய வணிகக்குழு கல் வெட்டு, 3 நடுகற்கள் ஆகியவை தான்தோன்றீஸ்வரம் கோவில் பகுதியில் புதர்களில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் வணிகக்குழு கல்வெட்டே ஆகும். சூதகர், மண்டல வணிகர், தென்னி லங்கை வளஞ்சியர், எழுநூற்றுவர் ஆகிய 4 வணிகக்குழுக்கள் இணைந்து, இங்குள்ள தான்தோன்றீஸ்வரமுடைய நாயனார் கோவிலில் ஒரு மண்டபத்தை கட்டிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடப்படும் நான்கு வணிக குழுக்களில் முதலாவது இருப்பது சூதகர் என்பதாகும். யூதர் என்பதையே இங்கு சூதகர் என குறிப்பிட்டுள் ளனர். 13-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் வணிகக்குழுக்களில் ஒருவராக யூதர்கள் குறிக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/13th-century-jewish-inscription-found-near-krishnagiri




