1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியது. அதன் பின், 2003-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல்கள் நடந்து வருகின்றன. அங்கேயும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. ட்ரம்ப் பதிவு‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்! அடையாள அட்டை இத்துடன் இந்தியாவைப் போல அமெரிக்காவில் வாக்காளர் அட்டை எல்லாம் இல்லை. அவர்கள் அங்கே இருக்கும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காட்டி வாக்களிப்பார்கள். சில மாநிலங்களில் அடையாள அட்டைக்கூட தேவையில்லை. தற்போது இந்தியாவைப் போல, அமெரிக்காவிலும் வாக்காளர் அட்டை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசாங்கம் கருதுகிறது. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது. “இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நமது நிர்வாகத்திடம், ‘புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டார். கடந்த இந்தியத் தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்! அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மேலும் வாக்களித்த ஒவ்வொருவரிடமும் ஒரு புகைப்பட அடையாள அட்டை இருந்தது. நாம் உடனடியாக ‘Save அமெரிக்கா சட்டத்தை’ நிறைவேற்ற வேண்டும்!” "டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/trump-cites-india-voter-id-system-to-push-us-election-reform




