Article complet
`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... "கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதும், ஜூன் 22-ம் தேதியன்று நெல்லை மாவட்டம், மடத்துப் பட்டியைச் சேர்ந்த மலர்விழி (வயது 45) என்ற பெண் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈஷாஅரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்? ஈஷா யோகா மையத்தில் 2022ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்கு வந்த நிலையில் மர்மமான முறையில் காணாமல் போனார். பிறகு அங்கிருந்த ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோன்று 2016ம் ஆண்டு பொறியியல் பட்டதாரிகளான தனது இரண்டு மகள்களை மூளைச் சலவை செய்தும், போதைப் பொருட்கள் கொடுத்தும், மொட்டையடித்தும் சித்திரவதை செய்யும் ஜக்கி வாசுதேவ் பிடியிலிருந்த தனது மகள்களை மீட்டுத் தர வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல்வேறு காலக்கட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச் சலவை செய்து ஈஷா மையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள மயான மேடையில் சட்டப்பூர்வமான தகவல்கள் அளிக்காமல் முறைகேடான வகையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்ற புகார்களும் இந்த மையத்தின் மீது உள்ளது. இந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒன்றிய அரசின் உச்சபட்ச தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளில் உள்ளதால் வழக்கு விசாரணைகளை நீர்த்துப் போகச் செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருவதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அறிக்கைஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன? ஆன்மீகத்தின் பெயரால் ஈஷா மையத்தின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. எனவே, ஈஷா மையத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள், ஏற்கனவே நடந்துள்ள சந்தேக மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஏற்கனவே இந்த மையத்தின் மீது போதைப் பொருள், நில மோசடி, வன விலங்குகள் மீது தாக்குதல், மனித உடல் தகனம் உள்ளிட்டு அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய முறையில் விசாரணை செய்து உண்மைகளை கண்டறிய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது." 'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



