ஐதராபாத், தெலுங்கு திரைத்துறையின் பழம்பெரும் நடிகை பவள சியமலா (வயது 75). மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர் 1984 ம் ஆண்டு தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார். அவர் தெலுங்கு சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ்பெற்றார். பவள சியமலா மரணம் இந்நிலையில், 75 வயதான நடிகை பவள சியமலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு பவள சியமலா இன்று உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவள சியமலாவின் இறுதிச்சடங்கு ஐதராபாத்தில் நாளை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prominent-telugu-character-artiste-pavala-syamala-dies-at-75




