மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான டீ எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23 - ம் தேதி நள்ளிரவு நுழைந்த கும்பல் ஒன்று பங்களா காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். 2 - வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சயான் மற்றொரு வாகன விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட் ஆனால், அவரின் மனைவியும் மற்றும் பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு அரசியல் களத்தில் அடிக்கடி புயலைக் கிப்பி வரும் இந்த வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மந்த கதியில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் 8 - வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி ( தற்போது 52 வயது) உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் நேற்று உயிரிழந்துள்ளார். சந்தோஷ் சாமி இறப்புக்கான காரணம் குறித்து முறையாக விசாரித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பட்டியலை மாற்ற இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/kodanad-case-accused-santhos-samy-death-update




