சென்னை, மதுரையை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வாழ்த்துகள் ஜப்பானில் நடைபெற்று வரும் 20-ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். புதிய உத்வேகம் இவரை போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்,… — CMOTamilNadu (@CMOTamilnadu) September 22, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-cricketer-gets-rs-75-lakh-incentive-cm-vijay-announces




