ஏரல், ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் ஏரலில் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாச்சலசாமி கோவிலில் வலம் வருதல் நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி. 5-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந் தேதி வரை பல்வேறு சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளால் நடக்கிறது. வெள்ளை சாத்தி தரிசனம் 13-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. 14-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/aral-chairman-arunachalasamy-temple-aadi-amavasya-festival-begins-with-flag-hoisting-on-aug-3




