நடிகர் கவின் தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின், கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘ஸ்டார்', 'கிஸ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘ஹாய்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது. தற்போது கென் ராய்சன் இயக்கும்‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார். கவினுக்கும் அவருடைய காதலி, மோனிகாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது. தன் மனைவிக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை நடிகர் கவின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் கவின் தனது குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும் தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இறைவனுக்கு நன்றி எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும், தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-kavin-shares-the-names-he-gave-his-twin-children




