துபாய், நடுவானில் விமான கடத்தலை இந்திய விமானி தடுத்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளைதுபாய் நிறுவனத்தின் ஒன்று 173 பயணிகள் உள்பட 180 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் சவுதி அரேபியாவை தாண்டி ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்தபோது விமானத்தை இயக்கி கொண்டிருந்த ஓமனை சேர்ந்த துணை விமானி, மற்றொரு விமானியான இந்தியாவை சேர்ந்த சுமித் மச்சாரை கத்தியால் குத்தி விமானத்தை கடத்தி தகர்க முயன்றார். ஆனாலும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுமித் மச்சார் துணிச்சலுடன் தடுத்து தாக்குதல் சதியை முறியடித்து பயணிகளை காப்பாற்றினார். நடுவானில் சினிமா காட்சி போல் நடந்த இந்த பயங்கர சம்பவம் உலகம் முழுவதும் பரப்பரப்பாக பேசப்படுகிறது. விமானி அறைக்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து பரபரப்பு தகவகள் விமானத்தை கடத்த முயற்சித்த சம்பவத்தில் விமானி அறைக்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து பரபரப்பு தகவகள் வெளியாகி இருக்கிறது. 180 பயணிகளுடன் விமானம் புறப்பட்ட பிறகு 2 1/2 மணி நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. ஜோடர்டான் வான்வெளிக்குள் விமானம் நுழைய முயன்றபோது விமானி அறைக்குள் இந்திய விமானி சுமித் மச்சாரை துணை விமானி திடீரென கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். நன்றாக பேசி கொண்டு வந்தவர் திடீரென தாக்குதல் நடத்தியது இந்தியா விமானிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடுவானில் குலுங்கிய விமானம் துணை விமானி தாக்கியதால் சுமித் மச்சார் உடலில் இருந்து ரத்தம் வடிந்தது. ஆனாலும் துணை விமானியுடன் கடுமையாக போராடி உள்ளார். இதில் இந்திய விமானி தாக்கியதில் துணை விமானி காயம் அடைந்தார். அந்த சமயத்தில் விமான் 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடிக்கு கீழே சென்றது. மேலும் விமான அறைக்குள் பலத்த சத்தம் கேட்டது. விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியில் அலறினார்கள். விமானி அறை கதவு திறப்பு விமானத்தை கடத்த முயன்ற துணை விமானியின் தாக்குதலில் சுமித் மச்சார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அதிக ரத்த இழப்பு காரணமாக மயக்க நிலைக்கு சென்றார். ஆனாலும் விமானத்தை தகர்க்கும் சதியை முறியடிக்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை. தரையில் கிடந்த அவர் விமானி அறையின் கதை திறக்கும் கருவியை இயக்கினார். இதனையடுத்து அறை கதவு திறந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்தாலும் சுமித் மச்சாரின் இந்த செயல்தான் விமான கடத்தலை தடுக்க முயக்கியமானதாக அமைந்தது. ஏனென்றால் வணிக ரீதியான விமானங்களின் விமானி அறை பறக்கும்போது பூட்டப்பட்டிருக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது பயணிகள் எளிதாக விமானி அறைக்குள் உள்ளே நுழைய முடியாது. ஒருவேளை சுமித் மச்சார், அறை கதவை திறக்கும் கருவியை இயக்காமல் இருந்தால் துணை விமானி எளிதாக விமானத்தை கடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. விமானி அறை கதவு திறப்பு விமானி அறை கதவு திறக்கப்பட்டது, அங்கு இந்திய விமானி ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதையும் துணை விமானி ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதையும் துணை விமானி, விமானத்தின் கட்டுப்பாட்டு கருவி அருகே நின்று கொண்டிருப்பதையும் பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இஸ்ரேலை சேர்ந்த யானிவ் ஹயூன் என்பவர், விமானி அறைக்குள் நுழைந்து துணை விமானியை மடக்கினார். துணை விமானியின் கழுத்தை இறுக்கி பிடித்துக்கொண்டு விமான கட்டுப்பாட்டு அமைப்புகளிலிருந்து வெளியே கொண்டு வந்தார். மேலும் 3 சக பயணிகள் விமான குழுவினர் துணை விமானியை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் ஹயூன் விமான கட்டுப்பாட்டு அமைப்புகளை பின்னோக்கி இழுத்ததால் விமானம் சற்று சமநிலைக்கு வரத்தொடங்கியது. உடனே விமான கடட்தலுக்கான அவசர தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திய விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கம் இந்த விமானத்தில் பிளைதுபாய் நிறுவனத்தை சேர்ந்த துணை விமானிகளும் பயணிகளாக பயணம் செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்கள் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இந்திய விமானி சுமித் மச்சார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்திய துணை விமானியை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. விமானியை தாக்கியது ஏன்? இதில் யார் யாருக்கு தொடர்பு என்பது குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி? விமானத்தை கடத்த முயன்ற துணை விமானியை இஸ்ரேலை சேர்ந்த யானிவ் ஹயூன் மடக்கி பிடித்தார். அவரை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பாராட்டினார். அவர் நேதன்யாகுவிடம் விமானத்தில் நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார். அப்போது அவர் ஹயூன் கூறியதாவது;- நான் விமானி அறைக்குள் சென்றபோது இருக்கைகளில் விமானிகள் இல்லை. ஒரு விமானி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். மற்றொருவர் கட்டுப்பாட்டு கருவிகள் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை நான் இறுக்கமாக பிடித்து வெளியே இழுத்தேன். அந்த நபரை 2 சக பயணிகள் பிடித்து கொண்டனர். விமானம் கீழே சென்று கொண்டிருந்ததால் நான் மீண்டும் விமானி அறைக்குள் சென்று கட்டுப்பாட்டு கருவிகளை பின்னோக்கி இழுத்தேன். விமானம் ஓரளவு சீரான நிலைக்கு திரும்ப தொடங்கியது. அப்போது விமானி ஒருவர் கட்டுப்பாட்டை தான் எடுத்துகொள்வதாக என்னிடம் கூறினார். விமான விபத்துகளை பற்றிய ஆவணப்பட தொடர்பான மேடே-வை நான் பார்த்ததால் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருந்தது என யானிவ் ஹயூன் கூறினார். பிளம்பர் வேலை பார்த்து வரும் ஹயூன், விமானத்தை கடத்த முயற்சி நடப்பதை பார்த்தபோது அதை தடுக்க துணிச்சலாக செயல்பட்டுள்ளார். நான் சினிமாவில் தான் இதனை பார்த்து பார்த்துள்ளேன். தற்போது நிஜமாக இதனை பார்க்கும் போது திகலாக இருந்ததாக அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/flydubai-cockpit-horror-terror-plot-suicide-bid-or-iran-link-5-chilling-questions-facing-investigators



