சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-valor-and-sacrifice-of-vochidambaranar-ttv-dhinakaran




