சென்னை விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடக்கூடிய சூழலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். பஞ்சாமிர்த அபிஷேகம் இந்த நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் வெளியூர்களில் இருந்து திருத்தணி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாக காணப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி பொது வழியில் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagaral-murugan-purakkanippu-verichchodi-thiruthani-murugan-kovil




