பெங்களூரு, கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது. அங்கிருந்து, தமிழகத்தின் ஒசூர் வரை, 11 கி.மீ., தூரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது. இது சாத்தியமானால், தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே, முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்காக, சென்னை மெட்ரோரயில் நிறுவனம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். கடந்தாண்டு அக்டோபரில், பொம்மசந்திரா -ஒசூர் மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, கர் நாடகா மாநில அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தென்னிந்திய முதல்வர்கள் -மாநாட்டில், ஒசூர் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இச்சூழலில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண்டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கி யுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்ட மைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும். மேலும், நிர்வாக அனுமதி, நிதி,வருவாய் பங்கீடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர் மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றவையும் வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces



