கேரளா, கேரளாவில் எர்ணாகுளம் வனத்துறையினரிடம் யானை தந்தங்கள், கலைப்பொருட்களை ஒப்படைக்க நடிகர் மோகன்லாலிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் பிரபல நடிகர் மோகன்லால் கொச்சி தேவரா பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது யானை தந்தங்கள், தந்தங்களால் செய்யப்பட்ட சில கலைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது அன்றைய காலக்கட்டத்தில் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையின் உரிமைச்சான்றிதழ்களை ரத்து செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தங்கள் வைத்து கொள்ள கேரள வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது என மோகன்லால் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. நடிகர் மோகன்லாலுக்கு யானை தந்தங்களை கைவசம் வைக்க வனத்துறை வழங்கிய உரிமைச்சான்றிதழ்களை கேரள ஐகோர்ட்டு முன்பு ரத்து செய்து இருந்தது. சரியான சட்ட நடவடிக்கைகளின் கீழ் இந்த உரிமைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி அது செல்லாது என்று அறிவித்தது. யானை தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு கேரள ஐகோர்ட்டின் 2 பேர் அமர்வு இந்த உரிமைச் சான்றிதழை ரத்து செய்த பின் யானை தந்தங்களை முறைப்படி வனத்துறையினரிடம் மோகன்லால் ஒப்படைப்பார் என்று தெரிகிறது. இதற்காக வனத்துறையினரின் ஒரு முறை பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் நடிகர் மோகன்லால் தன்னிடம் உள்ள யானை தந்தங்கள், கலை பொருட்களை ஒப்படைக்க உள்ளார். வனத்துறை அதிகாரி வழங்கிய விண்ணப்பம் இதற்கான விண்ணப்பத்தை எர்ணாகுளம் மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திக்கிடம் வழங்கி உள்ளார். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி, நடிகர் மோகன்லால் வீட்டிற்கு சென்று யானை தந்தங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். விரைவில் யானை தந்தங்கள், கலை பொருட்களை மோகன்லால் ஒப்படைக்க உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/actor-mohanlal-applies-to-hand-over-elephant-tusks-artifacts-to-the-forest-department




