திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 120 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின்பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை வழக்கு அதன் ஒரு பகுதியாக ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த திருநெல்வேலி மாவட்டம், கால்கரை பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் முருகன் (வயது 24), தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் விஷ்ணு(22) மற்றும் தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்அரவிந்த்(20) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது மேற்சொன்ன 3 பேரும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், ராதாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவுப்படி மேற்சொன்ன 3 குற்றவாளிகளும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 120 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 120 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/120-people-arrested-under-the-detention-act-in-tirunelveli-so-far-this-year




