நியூடெல்லி, வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். வாய்ப்பு இல்லை இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கவுதம் கம்பீர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "வைபவைப் பொறுத்தவரை, அவர் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அவரிடம் இருக்கும் திறமை என்ன, அவரால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒருவருக்கு, இப்போதுதான் அணிக்குள் நுழைந்த ஒருவரை விட எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, நிச்சயமாக அது நீண்ட கால வாய்ப்பாகவே இருக்கும். நீங்கள் 15 வயது நிரம்பியவராக இருந்தாலும் சரி, 30 வயது நிரம்பியவராக இருந்தாலும் சரி, உங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் காத்திருந்துதான் ஆக வேண்டும்." என்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை. தொடர் முழுவதும் சஞ்சு சாம்சனே விக்கெட் கீப்பர்-பேட்டராக களமிறங்கினார். 3-0 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இதில் 31 பந்துகளில் சதம் அடித்ததும் அடங்கும். தொடர்ந்து 222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/why-is-there-no-opportunity-for-vaibhav-suryavanshi-gautam-gambhir-explains




