சென்னை, மாணவர்களின் ஆரோக்கியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கல்வி பயில வழிவகுக்கும் உன்னதத் திட்டம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஒளிரும் புன்னகைத் திட்டம் நமது விருதுநகர் மாவட்டத்தில் அன்றைய மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னெடுப்பில், சி.எஸ்.ஆர் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முன்முயற்சி, இன்று தமிழகம் முழுவதும் 'ஒளிரும் புன்னகைத் திட்டம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! உரிய சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள், உரிய சிகிச்சை, ஆலோசனை மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படுகிறது. உன்னதத் திட்டம் இது வெறும் உடல்நலப் பரிசோதனை மட்டுமல்ல; மாணவர்கள் எந்தவிதத் தாழ்வுணர்ச்சியுமின்றி மிகுந்த ஆரோக்கியத்துடனும், உளவியல் தன்னம்பிக்கையுடனும் கல்வி பயில வழிவகுக்கும் உன்னதத் திட்டம். நன்றி விருதுநகரில் விதைக்கப்பட்ட இந்த நல்முயற்சியை மாநில அளவிலான அரசுத் திட்டமாக மாற்றிய ராஜ் மோகன் அமைச்சருக்கும், இதற்கு அடித்தளமிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-healthy-confident-learning-manickam-thakur




