72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் தனுஷின் 'ராயன்' படத்திற்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு 'கேப்டன் மில்லர்' படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 'ராயன்' இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "'ராயன்' திரைப்படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காகச் ஸ்பெஷல் மென்ஷன் தேசிய விருதையும் பெற்றிருப்பதில் நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். மதிப்பிற்குரிய தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவிற்கும் மற்றும் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது கலைப்பயணம் முழுவதும் தங்களது அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளத் தோழமைகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குநராக இது எனது முதல் தேசிய விருது ஆகும். OM NAMASHIVAAYA ❤️ — Dhanush (@dhanushkraja) July 18, 2026 எனது பலத்தின் தூண்களாக விளங்கும் எனது ரசிகர்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், இன்று வரையிலான எனது சிறந்த நடிப்பு இதுதான் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நான் மிகவும் போற்றி மதிக்கும் ஒரு நடிப்புக்காக இந்தச் சிறப்புத் தகுதியைப் பெறுவது, இந்த கௌரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. மேலும், முதல் முறை என்பது எப்போதும் மறக்க முடியாதது. 'ராயன்' திரைப்படத்திற்காக ஒரு இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றிருப்பது, நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு ஆசீர்வாதம்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/72nd-national-awards-dhanush-post-raayan-captain-miller-wins




