திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். கைபேசி வைப்பு மையம் இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற செப்டம்பர் 1-ந் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பிரதான கோபுரங்களின் அருகிலும் 5 இடங்களில் கைபேசி வைப்பு மையம் (mobile phone deposit centre) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/work-is-in-full-swing-to-set-up-a-mobile-phone-drop-off-center-for-devotees-at-the-tiruvannamalai-temple




