திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், திசையன்விளை, களக்காடு, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திசையன்விளை, களக்காடு மற்றும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை திசையன்விளை, மகாதேவன்குளம், கரைச்சுத்துஉவரி, கூட்டப்பனை, கூடுதாலை, குட்டம், விமனங்குடி. களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-20




