நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், 2018-ஆம் ஆண்டு வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானார். பிக்பாஸ் மூலம் அதிகரித்த புகழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கி நிலை குலைந்து போன யாஷிகா ஆனந்த், ஒரு வழியாக மீண்டு வந்து முன்பு போல படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தை தாண்டி வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 'உண்மையானவர்கள் யார் என்பதை அறிந்தேன்' இதற்கிடையில் தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தை தாண்டி வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யாஷிகா ஆனந்த் கூறியதாவது: "என் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது. நிறைய போராட்டங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளேன். அந்த வகையில் மிகவும் கடினமான காலகட்டத்தை தாண்டி வந்திருக்கிறேன். மீண்டும் பழையபோல் படங்களில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சோதனையான காலத்தில் என்னுடன் உண்மையாக இருந்தவர்கள் யார் என்பதை அறிந்ததே என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடமாகவும் நல்ல விஷயமாகவும் நான் பார்க்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-have-come-through-a-difficult-time-yashika-aannand-shares-her-anguish




