சென்னை, வீரமணியின் காமலீலைகள் 'ஜெம் கிரானைட்' தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலி யல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய காமக்களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2003-ம் ஆண்டில் இருந்து இவரது பாலியல் விளையாட்டுக்கள் தொடர்ந்து நடந்துள்ளது. தற்போது வரையில் சுமார் 23 ஆண்டுகளாக இவர் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது முன்னாள் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சம்மன் வீரமணி மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கை போலீசார் கோர்ட்டில் முடித்து வைத்துவிட்டனர். ஆனால் கோர்ட்டு அதை ஏற்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், வீரமணி வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜ லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-case-summons-issued-to-assistant-commissioner-and-police-inspectors




