தூத்துக்குடி, தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் முறையாக மலேசியா கப்பலில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை இறக்கி சாதனை படைக்கப்பட்டது. சரக்கு கப்பல் மலேசியாவின் குனாக் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. 143 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 9.70 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோஹித் முன்னிலையில் கச்சா பாமாயிலை இறக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவன நிர்வாக இயக்குனர் கே.டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 4 சேமிப்பு தொட்டிகள் மாற்றியமைக்கப்பட்ட முனையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேமிப்பு தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் பாமாயில் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் உள்ள 15 ஆயிரம் டன் பாமாயிலும் நாளைக்குள் (திங்கட்கிழமை) இறக்கப்பட்டு விடும். கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் துறைமுகத்தின் தொழில் மண்டலத்தில் 4 சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளது. இந்த நிறுவனம் நாளொன்றுக்கு 1,000 டன் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் தயாரிக்கும் திறன் கொண்டது. பசுமை ஹைட்ரஜன் இங்கு தயாரிக்கப்படும் பாமோலின், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் நுகர்வுக்காக வினியோகிக்கப்படுகிறது. துறைமுகம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் சுமார் 1,633 ஏக்கர் நிலத்தை மின் உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழில்கள், கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட தொழில்களுக்கு ஒதுக்கி உள்ளது. முதல் முறையாக. மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி முனையத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டிருப்பது, துறைமுகத்தில் சரக்கு வகைகளைப் பல் வகைப்படுத்தவும், துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கும், பிராந்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெய் துறையின் விரிவாக்கத்துக்கும் உதவும் என்று துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-palm-oil-imported-at-tuticorin-port-for-the-first-time




