திருப்பூர், பஞ்சு விலை குறைய வாய்ப்புள்ளதால், ஒசைரி நுால் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. புதிய பஞ்சு வரத்து பருத்தி ஆண்டு (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) நிறைவடைய 15 நாள் மட்டுமே உள்ள நிலையில் இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது சற்று அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறுவடை நடந்ததால், புதிய பஞ்சு வரத்தும் துவங்கி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தினசரி பஞ்சு வரத்து, 2,200 'பேல்'களாக (ஒரு பேல் 170 கிலோ) குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரம் 'பேல்'களை தொட்டுவிட்டது. ஒசைரி நுால் விலை மார்க்கெட்டில் வரத்து துவங்கியதால், பஞ்சு விலை சற்று குறைந்துள்ளது. புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது, மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த 1ம் தேதி, பஞ்சு விலை உயர்வால், பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது. பஞ்சு விலை குறைய துவங்கியுள்ளதால் நுால் விலை, கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. அடுத்தடுத்த விலை உயர்வுக்கு பிறகு, நுால் விலை குறைக்கப்பட்டதால், உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/osairi-yarn-price-dropped-by-5-rupees




