ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி இருக்கிறார். அதில், "ஹாரீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள், இல்லு திருவிழா, B308 அறையில் இரவெல்லாம் படித்தது, நண்பர்களுடனான நட்பு மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதல் என ஐ.ஐ.டி கரக்பூரின் பல நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன. மனைவியுடன் சுந்தர் பிச்சை இந்த வளாகத்தில்தான் நான் எனது மனைவி அஞ்சலியைச் சந்தித்தேன். இங்குதான் முதன்முதலில் புரோகிராமிங் செய்யக் கற்றுக்கொண்டேன் மற்றும் கணினியைப் பயன்படுத்தும் முதல் வாய்ப்பையும் பெற்றேன். ''மெய்யழகன்' பிரேம் குமாருடனான படம் எப்போது ரிலீஸ்?' - பகத் பாசில் கொடுத்த அப்டேட் இந்தப் பயணம் என் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்து, கூகுள் நிறுவனத்தை நோக்கி என்னை அழைத்துச் சென்றது. என்னால் முடிந்தவரை பலருக்குத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க உதவியிருக்கிறது. சுந்தர் பிச்சை இந்தத் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் கல்வி என்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள்" என்று தனது நினைவுகளை மகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார் சுந்தர் பிச்சை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/trending/sundar-pichai-shares-iit-kharagpurs-happy-memories




