புதுடெல்லி, மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இருந்ததாக ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு - வினாத்தாள் கசிவு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா இன்று (புதன்கிழமை)செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காதீர்கள். ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும். தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. விவாதத்திற்கு தயார் தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்தது. காங்கிரஸ், காங்.கூட்டணி ஆளும் மாநிலங்களில் தான் தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளது. நாட்டின் எதிர்காலம், மாணவர்களின் நலன் குறித்து சிந்திப்பதே நமது கடமை. குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்பதைவிட இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே நல்லது. நாடாளுமன்றத்தில் எத்தனை மணி நேர விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரினாலும் அதற்கு அரசு தயார். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதற்கு அரசு பதிலளிக்கும். பிரதமர் மோடி பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு பொறுப்புள்ள மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அரசு என்பதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன். நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு எப்போதும் ஆர்வமாக உள்ளது. அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளையும் எதிர்-குற்றச்சாட்டுகளையும் கடந்து இது குறித்து விவாதிக்க வேண்டும். விவாதத்திற்கான மிகச் சிறந்த தளம் நாடாளுமன்றமே. அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். விரிவான மற்றும் ஆழமான விவாதத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் அலசி ஆராயும் வகையில் ஒரு முழுமையான விவாதம் நடைபெறட்டும். மாணவர்களுக்கு அநீதி வினாத்தாள் கசிவுக்கு வழிவகுத்த காரணிகள் என்ன? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? மத்திய அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது? வினாத்தாள் கசிவு எங்கள் கவனத்திற்கு வந்தபோது நாங்கள் அதை எவ்வாறு கையாண்டோம், மற்ற அரசுகள் அதை எவ்வாறு கையாள வேண்டும்? லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில், நாம் எதை ஆழமாகப் பரிசீலித்து அதற்கான தீர்வை காண வேண்டும்? சோனம் வாங்சுக் நாங்கள் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றிருந்தோம். அவர் சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மேடான்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்ததால், அங்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தன. எங்கள் சந்திப்பின்போது, அவரது உடல்நிலை மற்றும் நலம் குறித்து விசாரித்தோம். மேலும், அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, பொதுவாழ்வில் இணையுமாறும், மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்துமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டோம். அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் எங்கள் அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. இன்று அவர் எனக்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு நாங்கள் பதிலளிப்போம். பதிலளித்த பிறகு, பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்வோம். அரசியல் ஆதாயம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் இவ்வளவு மோசமாக பேசுகிறீர்கள்? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) மற்றும் அதன் ஆதரவு பெற்ற அரசுகளின் ஆட்சிக்காலத்தில் நடந்தவை குறித்து நீங்கள் ஏன் விவாதிக்கவில்லை? ஏன் அவர்களிடமிருந்து விலகி நிற்கிறீர்கள்? மாணவர்களின் நலன் உங்கள் நோக்கம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. கல்வி மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவைதான் உண்மையான நோக்கங்களாக இருக்க வேண்டும். ஆனால், அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை. மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடவே நீங்கள் விரும்புகிறீர்கள். அரசியல் ஆதாயம் தேட நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/question-paper-leak-occurred-in-the-teacher-recruitment-entrance-exam-in-tamil-nadu-jp-nadda-alleges




