பிரித்விராஜின் ‘கலிபா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘கலிபா’. இந்தப் படத்தில் நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். ஜினு ஆபிரகாம் இதற்கு முன்பு பிருத்விராஜ் நடித்த 'ஆடம் ஜோன்', 'கடுவா' உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி லண்டனில் தொடங்கிய ‘கலிபா’ படத்தின் படப்பிடிப்பு, லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மேலும், இப்படத்தில் நடிகர் மோகன்லால் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு நிறைவு. வெளியீட்டு தேதி அறிவிப்பு ‘கலிபா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘கலிபா’ திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ‘கலிபா’ படத்தின் ‘நிலவே’ பாடலை சித் ஸ்ரீ ராம் மற்றும் மக்பூல் மன்சூர் இணைந்து பாடியுள்ளனர். தணிக்கை சான்றிதழ் ‘கலிபா’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது. டிரெய்லர் வெளியீடு இந்த நிலையில், பிரித்விராஜ் நடித்த‘கலிபா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. Presenting the trailer. Link - This Onam.A legacy awakens! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prithvirajs-khalifa-film-trailer-out




