சென்னை, திரைப்பட விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேசிய போது, “நல்லவேளை, நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது” என்று நகைச்சுவையாக கூறினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி வெளியான திரைப்படம் ‘எல்.ஐ.கே.’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘எல்.ஐ.கே.’ திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.70 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இப்படம் ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்ததாகவும், அந்த அளவுக்கு வசூல் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததால் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஏமாற்றம் அடைந்தனர். கியாரா அத்வானியிடம் பேசிய விக்னேஷ் சிவன் இந்த நிலையில், திரைப்பட விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது கியாரா அத்வானியை நோக்கி பேசிய விக்னேஷ் சிவன், “உங்கள் நடிப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு கதையை உங்களிடம் சொல்லியிருந்தேன். அந்த கதையைத்தான் ‘எல்.ஐ.கே.’ படமாக இயக்கியிருந்தேன்” என்று கூறினார். “நல்லவேளை நீங்கள் நடிக்கவில்லை!” தொடர்ந்து, “நல்லவேளை, நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது” என்று விக்னேஷ் சிவன் நகைச்சுவையாக கூறினார். தான் இயக்கிய ‘எல்.ஐ.கே.’ படத்தையே விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கலாய்த்துப் பேசிய இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/its-actually-good-that-you-didnt-act-vignesh-shivan-speaks-openly-to-kiara




