கோலாலம்பூர், மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (வயது 66). 2021-ம் ஆண்டு தொடங்கி 15 மாதங்களுக்கு அந்த நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது. ரூ.380 கோடி இதுகுறித்து அந்த நாட்டின் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணக்கில் வராமல் ரூ.380 கோடி அளவில் இஸ்மாயில் சப்ரி சொத்து வைத்திருந்தது தெரிந்தது. இதில் ரூ.34.84 கோடி (1.47 கோடி ரிங்கிட்) ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் அடங்கும். பிணையில் ஜாமீன் இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு கோலாலம்பூர் கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். இஸ்மாயில் சப்ரி யாகூப் குற்றமற்றவர் என்று வாதிட்ட நிலையில், அவருக்கு ரூ.71.10 லட்சம் (3 லட்சம் ரிங்கிட்) பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த விசாரணை செப்டம்பர் 29-ந்தேதி நடைபெறுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நஜிப் ரசாக், முகிதீன் யாசினை தொடர்ந்து, குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 3-வது முன்னாள் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/malaysias-former-pm-ismail-sabri-charged-with-concealing-assets




