பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கயாடு லோகர். ஒரே படத்தின் மூலம் பெரியளவில் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போனார். தற்போது தமிழில் 'இம்மார்ட்டல்', 'மஞ்சணத்தி', 'சூர்யா 48' என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடிக்கிறார். சமீபத்தில் சிம்பு ஜோடியாக ஒரு புதிய படத்தில் கயாடு லோகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயாடு லோகர் வருத்தம் தெரிவித்துள்ளார். “சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதெல்லாம். ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் கைவிடப்பட்டுவிடுகிறது. அதனால், அவருடன் நான் இறுதியாக இணையும் படம் நிச்சயமாக மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். அதை விதியின் கையில் விட்டுவிட்டேன்" என்று கயாடு லோகர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-will-simbu-act-as-a-pair-i-left-it-to-fate-kayadu-lohar




