அஜித் குமார் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. 'கிளாடியேட்டர்' ஆவணப்படத்தின் டிரெய்லர் பிரத்யேகமாகச் சில திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள். இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். டிரெய்லரில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அஜித் குமார் இதில் அவர், "அஜித் திரும்ப ரேஸுக்கு வந்தது டிராபி வெல்லவோ, சக்சஸ்ஃபுல்லா இருக்கவோ கிடையாது. அனைத்தும் சாத்தியம் என நிரூபிப்பதற்காகத்தான். அனைவருக்கும் அவரை நடிகராகத்தான் தெரியும். ஆனால், சிலருக்கு மட்டும்தான் அவரிடம் கனவுகளைத் தேடிச் செல்கிற குணம் இருப்பது பற்றித் தெரியும்" எனப் பகிர்ந்திருக்கிறார். அஜித்தின் மகளும் மகனும் இந்த டிரெய்லரில் பேசியிருக்கிறார்கள். அத்தோடு அவருடைய மேலாளரும் நண்பருமான சுரேஷ் சந்திரா, அஜித்தின் ரேஸிங் குழுவினர் ஆகியோரும் அஜித்தின் ரேஸிங் பக்கம் குறித்துப் பேசும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கார் ரேஸ் காட்சிகள், அதில் அஜித்துக்கு ஏற்படும் காயங்கள் என அவரின் ரேஸிங் பக்கத்தின் முக்கியமான நிகழ்வுகளை இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள். Gladiators Documentary- Ajith குறிப்பாக, ஒரு ரேஸுக்காக அஜித் தன்னை எப்படித் தயார்படுத்திக் கொள்கிறார் என்பதையும் டிரெய்லர் காட்சிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆவணப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் விஜய் அறிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/ajith-kumar-gladiators-documentary-trailer-release




