நெல்லை, நெல்லை மாவட்டம் மேட்டுப்பிராஞ்சேரி கிராமத்தில் பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமான கோவில் நிலத்தின் அருகே பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இதனை எதிர்த்து ஏற்கனவே பல்வேறு போராட்டத்தில் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், போராட்டங்களை மீறி பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல்லை கலெக்டர் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால், உரிய தீர்வு கிடைக்காமல் அலுவலகத்திற்குள் வரமாட்டோம் எனக்கூறி, மீண்டும் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-building-a-panchayat-office-near-temple-land-villagers-protest-in-front-of-the-nellai-collectors-residence




