சென்னை, சென்னை மாங்காடு அருகே கொழுமணிவாக்கத்தை சேர்ந்த விக்கி என்பவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே, அந்த பெண்ணின் செல்போனுக்கு யுவனேஷ் என்ற இளைஞர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் விக்கியிடம் கூறியுள்ளார். இதில் யுவனேஷ் என்பவர் விக்கியின் பள்ளித் தோழன் ஆவார். இந்நிலையில், தனது பள்ளித் தோழனே தன்னுடைய காதலிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதை அறிந்து விக்கி ஆத்திரமடைந்தார். இதையடுத்து தனது நண்பர் பார்த்திபனுடன் சேர்ந்து யுவனேஷை விக்கி சரமாரியாக தாக்கியதில் யுவனேஷ் உயிரிழந்தார். பின்னர் யுவனேஷின் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசிவிட்டு, இருவரும் மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து கிணற்றில் இருந்து உடல் மீட்கப்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-obscene-text-messages-sent-to-his-girlfriend-boyfriend-beats-schoolmate-to-death




