அட்லாண்டா, அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் 32 வயதான ஹாரி கேன் கூறு கையில், 'முடிவு குறித்து கேட்கிறீர்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லை. அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளோம். வெற்றிக்கு மிக அருகில் வந்தோம். 10 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் வெற்றி கைநழுவி போனது வீரர்கள் அனைவரையும் நிலைகுலைய செய்து விட்டது. இந்த நிலையை எட்டுவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். வீரர்கள் அனைத்தையும் இதற்காக அர்ப்பணித்தார்கள். முதல் 60 நிமிடங்கள் வரை நாங்கள் அருமையாக விளையாடினோம். கோல் அடித்து முன்னிலையில் இருப்பதற்கு தகுதியானவர்களாக எங்க ளது ஆட்டம் அமைந்தது. ஆனால் அதன் பிறகு பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதிலும் தடுமாறி விட் டோம். இது அவர்களுக்கு கடைசி கட்டத்தில் உத்வேகத்தை பெறவும், கோல் வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுத்தது. இத்தகைய சூழலில் நாங்கள் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை கண்டறிய வேண்டும். ஏனெனில் கடந்த 4-5 தொடர்களில் இது போன்றே தொடரின் கடைசி தருணங்களில் ஏதோ ஒன்றை கச்சிதமாக செய்ய முடியாமல் கோட்டை விட்டு விடுகிறோம்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/we-are-in-deep-pain-england-captain




