பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது. "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்குத் தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்தப் பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! பழனி`இன்னும் 2 நாள்களில் இறந்துவிடலாம்' - சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம்; செவிமடுக்காத அரசு! இந்தப் பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர்சென்டர் என்று சொன்ன முதலமைச்சர் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர்சென்டர்? அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர்சென்டர்? இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்". பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை… — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 15, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/eps-demands-cbi-probe-into-palani-temple-land-transfer-case




