சென்னை, தமிழகத்தில் சர்க்கரை விலை 9.7 சதவீதம் குறைந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத விலையேற்றம் தமிழகத்திற்கு சர்க்கரை வழங்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்ததால் தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. இந்த சர்க்கரை விலையேற்றத்தை பயன்படுத்தி, மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் சர்க்கரை பதுக்கல்களும் நடைபெற்று வந்தது. இதுபோக, இ-20 பெட்ரோல் தயாரிக்க கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்பட்டதாலும் சர்க்கரை விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டு, சர்க்கரை விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டது. எனினும், சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் வரை கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி இந்த நிலையில், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு சர்க்கரை பதுக்கலை தடுத்து வருகிறது. 9.7 சதவீதம் விலை குறைவு இதுபோன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி அதன் விலை குறையத் தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை நேற்று ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சதவீதத்தில் கணக்கிடும்போது, 9.7 சதவீதம் விலை குறைவாகும். இன்னும் வரும் காலங்களில் சர்க்கரை விலை மேலும் குறையும் என்று சர்க்கரை ஆலைகளின் உயரிய அமைப்பான இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-kilo-of-sugar-is-being-sold-for-rs65-in-tamil-nadu



