திருச்சி, சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர்-மூர்த்திபாளையம் இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8-ந்தேதி ஆகிய நாட் களில் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில்கள் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும். திருச்சி-சரளப்பள்ளி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:17078) குண்டூர், சட்டேனபள்ளி, நதிகுடே ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில் குண்டூருக்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்து 2.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் சட்டேனபள்ளிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து 3.20 மணிக்கும், நதிகுடேக்கு மாலை 3.59 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கும் புறப்பட்டு செல்லும். தஞ்சை யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி-மயிலாடுதுறை மெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் (சனிக்கிழமை), வருகிற 8-ந்தேதியும் திருச்சியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை மெழு எக்ஸ்பிரஸ் (16834) ஆலக்குடியில் 30 நிமிடங்கள் நின்று செல்லும். மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்- கட்ச்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16354) இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் செல்வது தவிர்க்கப்படும். கூடுதலாக மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mayiladuthuraipalakkadsaralapalli-train-services



