கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தின் விளைவாக, நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எங்களுக்கு பதவிகளை விட மாணவர்கள், இளைஞர்களும்தான் முக்கியம்" என தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜகவை பொறுத்தவரை இந்த நாடும், நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும்தான் எந்த ஒரு பதவியை விட மேலானவர்கள். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா இந்த உயரிய கொள்கைகளை வெளிகாட்டுகிறது. இளைஞர்களின் உணர்வுகளுக்கு மோடி அரசு மதிப்பளிக்கிறது.அதே நேரம், இந்த அரசு வினாத்தாள் கசிவு விஷயத்தை தீவிரமாக அணுகியிருக்கிறது. இந்த முறைகேடுகளை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதிலும் அரசு உறுதியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/youth-and-students-are-more-important-to-us-than-holding-office-home-minister-amit-shah




